நாய்க்கு ஒரு வயது என்றால், மனித வருடத்தில் 7 க்கு சமம்.
இப்படித்தான் இதுவரை நாயின் வயதை கணக்கிட்டு வந்தோம்.
இது துல்லியமானது அல்ல; நாயின் உடல் வளரும்போது தெரியக்கூடிய பிரத்யேகமான அடையாளங்களை கொண்டுதான் உண்மையான வயதை கணக்கிட முடியும் என இப்போது விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.
புதிய முறைக்கு DNA methylation என்று பெயர் சூட்டி இருக்கின்றனர். மரபணுக்களில் நிகழ்கிற மெல்லிய ரசாயன மாற்றங்களை குறித்தானது இந்த முறை. மனிதனுக்கும் நாய்க்கும் பொதுவான நிகழ்வு இது.
இதற்காக நடந்த ஆராய்ச்சியில் 104 லேப்ர்டார் ரெட்ரீவர் நாய்கள் பங்கேற்றன. அவற்றின் வயது 4 வாரம் முதல் 16 வயது வரை.
ஒரு கேல்குலேட்டரை பயன்படுத்தி, நாயின் வயதுக்கான நேச்சுரல் லாகரிதம் என்ன என்பதை கண்டறிந்து, அதை 16 ஆல் பெருக்கி, அத்துடன் 31 கூட்டுவதுதான் புதிய முறை.
புதிய முறைப்படி பார்த்தால், பிறந்து 8 வாரம் ஆன ஒரு நாய், 9 மாதம் ஆன குழந்தைக்கு சமம்.
பெரிய நாய்களை ஆராய்ந்தபோது, அதிகபட்ச முதிய வயது 12 என தெரிய வந்தது. இது மனிதனின் 70 வயதுக்கு சமம். எழுபது வயது என்பது உலக அளவில் மனிதனின் சராசரி ஆயுட்காலம்.