ஆஸ்ப்ரின் எல்லாரையும் காப்பாற்றாது

இதய நோய் இல்லாதவர்கள்


தினமும் சும்மாவாச்சும் ஆஸ்ப்ரின் மாத்திரை


எடுத்துக் கொள்வது தப்பு என்கிறது ஒரு ஆய்வு.


 


ஹார்ட் அட்டாக் அல்லது ஸ்ட்ரோக் வந்தவர்கள்


தினமும் ஆஸ்ப்ரின் போட்டுக் கொள்ள


டாக்டர்கள் அட்வைஸ் செய்கின்றனர்.


அது ஓ.கே.


 


இதய நோய் இல்லாதவர்கள், மாரடைப்பு


அல்லது பக்கவாதம் வராதவர்களும்


40 வயது தாண்டிவிட்டால் தினம் ஒரு ஆஸ்ப்ரின்


போட்டுக் கொள்வது நல்லது என்று


பல டாக்டர்கள் சொன்னார்கள்.


 


அதை நம்பி அமெரிக்காவில் மட்டும்


3 கோடி பேர் ஆஸ்ப்ரின் போடுகிறார்கள்.


பாதி பேர் டாக்டர் சொல்லாமலே இந்த


”முன் எச்சரிக்கை நடவடிக்கையை”


எடுத்திருக்கிறார்கள்.


 


ஆஸ்ப்ரின் போட்டால் மாரடைப்பை தடுக்கலாம்


என்கிற தவறான நம்பிக்கை இதற்கு காரணம்.


 


ஆஸ்ப்ரின் மேல் டாக்டர்களுக்கு இருந்த


அபார நம்பிக்கையை சமீபத்திய ஆய்வுகள்


தகர்த்து விட்டன.


 


அமெரிக்காவின் ஹார்வர்ட் யுனிவர்சிடியும்


இஸ்ரேலின் பெத் டீகானஸ் மெடிகல் சென்டரும்


இணைந்து அந்த ஆய்வை நடத்தினர்.